By Bagavanidhi M., Grassroots Governance & Additional Programme Coordinator, Community Wellbeing
Last year, 27 tribal Gram Sabhas under the Coimbatore North Revenue Division in Coimbatore District were granted Community Rights (Form B) under the Forest Rights Recognition Act of 2006.
In this case, a post-CFR possibilities consultation meeting was facilitated by the Keystone Foundation Community Wellbeing programme on Thursday 13/06/24 in Karamadai Dayanur. The meeting was held with the aim of discussing the challenges faced on livelihood and forest governance by tribal gram sabhas after getting community rights. About 500 representatives of the Forest Rights Committee and Community Forest Rights Management and Conservation committees from 27 tribal village councils participated in this meeting and presented their views.
The meeting was presided over by Mr. Annadurai, Director, Tribal Welfare, Government of Tamil Nadu and Ms. Snehlata Nath, Founder-Director, Keystone Foundation, along with the presence of key officials of Coimbatore Tribal Welfare Department and Keystone Foundation.
In this meeting, 27 gram sabha representatives discussed the challenges and problems faced by their village in forest governance and livelihood activities and people presented more than 50 different petitions. Besides livelihood priorities and needs, the forum also facilitated in presenting and discussing various developmental rights and priority needs identified by the different tribal Gram Sabhas (GS). During the meeting, some of the requests were given immediate sanction/approval by Mr. Annadurai.
Tamil version
கடந்த ஆண்டு கோவை மாவட்டம், கோவை வடக்கு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 27 பழங்குடி கிராம சபைகளுக்கு 2006 வன உரிமை அங்கீகார சட்டம் நடவடிகளிகளில் சமுதாய உரிமைகள் (Form B ) வழங்கப்பட்டது.
இந்நிலையில் பழங்குடி கிராம சபைகள் சமுதாய உரிமை பெற்ற பிறகு சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசிக்கும் நோக்கத்தோடும் கடந்த 13/06/24 வியாழன் அன்று காரமடை தாயனூரில் ஆலோசனை கூட்டம் கீஸ்டோன் பவுண்டேஷன் – சமுதாய நலன் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது . இந்த கூட்டத்தில் 27 பழங்குடி கிராம சபைகளை சார்ந்த வன உரிமை குழுக்கள் மற்றும் வன மேலாண்மை குழுக்கள் சார்ந்த சுமார் 500 பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் திரு அண்ணாதுரை அவர்கள் மற்றும் கீஸ்டோன் பவுண்டேஷன் நிறுவன இயக்குனர் திருமதி ஸ்நேகலதா நாத் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் கோவை பழங்குடியினர் நலத்துறை மற்றும் கீஸ்டோன் பவுண்டேஷன் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
இந்த கூட்டத்தில் 27 கிராம சபை பிரதிநிதிகள், வன நிர்வாகம் மற்றும் வாழ்வாதாரம் நடவடிக்கைகளில் அவர்களின் கிராமம் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை விவாதித்தனர் , மேலும் மக்கள் சுமார் 50 க்கு மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள், இந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து குறைகளை களைய முயற்சி செய்வதாக தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் திரு அண்ணாதுரை அவர்கள் கிராம சபை பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்தார் .