February 28, 2023
By Shailaja Bharathi Ponnamma, Climate Educator
28/02/2023ல் எங்கள் Keystone டீம் Climate Change Program ஒரு வினாடி வினா நடத்தலாம் என்று முடிவுசெய்தோம். ஏன் அந்த நாள் என்றால், அந்த நாள் Sir C.V. Raman அவர்களின் Raman Effect கண்டுபிடித்த நாளை குறிக்கிறது. அன்று National Science Dayஆகா கொண்டாட படுகிறது , அதனால் அந்த நாளில் போட்டி வைக்கலாம் என்று முடிவுசெய்தோம். இந்த போட்டியில் Climate Smart Schools ஆன C.S.I, G.H.H.S, Kannerimukku, Kookalthorai, Keirbetta, Keircombai மற்றும் Milidhane ஆகிய பள்ளிகளில், ஏற்கனவே எல்லா மாணவர்களுக்கும் ஒரு QUIZ போட்டியை நடத்தினோம், அதில் முதல் வந்த ஒரு குரூப் keystone இல் நடந்த Inter School Quiz போட்டியில் கலந்து கொண்டார்கள். நாங்கள் ஆறு மாதங்களாக எடுத்த வகுப்பை வைத்து மாணவர்களிடம் கலந்து ஆலோசித்தோம். 27/02/2023 அன்று எல்லா பள்ளிகளுக்கும் நேரில் சென்று அழைத்தும், மாணவர்களை சந்தித்து “பதற்றம் இல்லாமல் பதில் சொல்லுங்கள், உங்களுக்கு நடத்திய பாடம் சம்மந்தமாக தான் வரும் “என்று ஊக்குவித்தோம்.
28/2/23 அன்று மாணவர்கள் ஒரு சீட் மூலம் அவர்களின் குழுவை தேர்ந்தெடுத்தனர். ஒரு பள்ளியிலிருந்து 8 மாணவர்கள் வந்திருந்தனர் அதில் 3 பேர் போட்டியாளர்களாகவும் மற்ற மாணவர்கள் பார்வையாளர்களாகவும் இருந்தனர். ஏழு அணிகள் இருந்தது, முதல் அணி frost, இரண்டாம் அணி forest, மூன்றாம் அணி thunderstorm, நான்காம் அணி permafrost, ஐந்தாம் அணி extinction, ஆறாம் அணி cool breeze, ஏழாம் அணி on fire. 2.15 மணியளவில் ஆரம்பித்தோம். மொத்தம் 5 சுற்றுகள் இருந்தது, முதல் சுற்று odd one out, இரண்டாம் சுற்று pictionary. மூன்றாம் சுற்று picture scramble, நான்காம் சுற்று cross puzzle மற்றும் ஐந்தாம் சுற்று rapid fire. முதல் சுற்று வரும்போதே எங்களுக்கு பயமும் பதற்றமும் இருந்தது, நாங்கள் சொல்லிக்கொடுத்தது வருமோ இல்லையோ என்று. முதல் சுற்று முடிந்த பிறகு, மாணவர்கள் எளிதில் வரவிருக்கும் சுற்றுகளை புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தோம்.
Crossword Puzzle round மட்டும் ஆங்கிலத்தில் இருந்ததால் கொஞ்சம் சிரமமாக இருந்தது என்று மாணவர்கள் சொன்னார்கள், ஆனாலும் அந்த சுற்றை நன்றாக விளையாடி முடித்தனர். 3.45 மணியளவில் போட்டி முடிவடைந்தது. பின் எங்கள் senior project coordinator- Sara அவர்களை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க அழைத்தோம். வெற்றிபெற்ற குழுக்களுக்கு மட்டும் இல்லாமல், பங்கேற்ற அணைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்களிடம் போட்டியை பற்றி கேட்டபோது “ரொம்ப பிடிச்சது , எங்க மாணவர்களுக்கு ரொம்பவும் பயன்உள்ளதாக இருந்தது என்று கூறினர். மாணவர்களும் “மகிழ்சியாக இருந்தது, இவ்வாறாக இன்னொரு போட்டிக்கு எதிர்பார்க்கிறோம் என்றனர்” இப்போட்டியை நன்றாக முடிக்க ஒத்துழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள் .