Written by – Ponnamma and Manimegalai (Climate Educators), Climate Change
(English description below)
எங்களது Climate Smart School வேலை தமிழ்நாட்டை தாண்டி இமயம் வரை சென்றதில் மகிழ்ச்சி. முதல்முறையாக நாங்கள் விமானத்தில் செல்லப் போகிறோம் என்று நினைக்கும் போது சந்தோஷம் கலந்த ஒரு பதட்டம்; விமானம் ஏறும் வரை இருந்தது. முதல் முறையாக நாங்கள் விமான நிலையத்தை பார்க்கிறோம்,
விமானத்தை ஏறும் வரை சென்ற வழிமுறைகள் எல்லாம் புதிதாக இருந்தது. ஏறும்போது பயத்தோடு ஏறினாலும் இறங்கும்போது நாங்கள் மகிழ்ச்சியாக இறங்கினோம். எங்கள் முதல் அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது.
சண்டிகாரிலிருந்து தியோகு வரை நாங்கள் டாக்ஸியில் பயணித்தோம், போகும் வழியில் நாங்கள் பார்த்த அந்த இயற்கை காட்சிகள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது. நீலகிரியில் உள்ள மலைகள் தான் அழகு என்று நினைத்திருந்தோம் ஆனால் அங்கு இதை விட அழகான மலைகள் அடுக்கடுக்காகவும், உயரமாகவும்
இருந்தது. அங்குள்ள வீடுகளும், பாறைகளும் வித்தியாசமானதாக இருந்தது. மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனமாகும் அந்த காட்சி கண்ணை கவரும் வண்ணம் இருந்தது, அதை நாங்கள் ரசித்துக் கொண்டே தியோகை அடைந்தோம். அடுத்த நாள் காலையில் நாங்கள் அங்குள்ள ஹப்பிற்கு மின்சார பேருந்தில்
பயணித்தோம். நாங்கள் அந்த உயரமான மலையில் இருந்து செல்லும் வழியில் குறுகிய ஒரு பாதை வழியாக தடுப்பு சுவர் ஏதும் இன்றி சென்றடையும் வரை எங்களுக்கு திக் திக் என்று இருந்தாலும் மலைகளும், காடுகளும், சாலைகளும் அதோடு அந்த ஆப்பிள் தோட்டமும் பார்ப்பதற்கு மிகவும் இதமாக இருந்தது. ஹப்பிள் உள்ள குழுவுடன் நாங்களும் சேர்ந்து எங்கள் கலந்துரையாடலை தொடங்கினோம். ஆஷிஷ் மற்றும் ஸ்ரீ அவர்கள்தான் அங்கு உள்ள காலநிலை கல்வியாளர்கள் . நாங்கள் எப்படி காலநிலை மாற்றம் பற்றிய கல்வியை ஆரம்பித்தோம், எங்கள் இரண்டு வருட அனுபவத்தில் எப்படி நாங்கள் பாடம் எடுத்தோம் , எந்த முறையில் ஆக்டிவிட்டியை பயன்படுத்த வேண்டும், உள்ளூர் உதாரணங்களை பயன்படுத்தி எப்படி மாணவர்களுக்கு புரிய வைத்தோம்
என்பதையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டோம். ஆஷிஷ் எங்களுக்கு அந்த இடத்தை பற்றிய நிறைய சுவாரசியமான விஷயங்களை கூறினார், அங்குள்ள மரத்தை நாங்கள் பைன் என்று நினைத்தோம் ஆனால் அது
தேவதார், அந்த இடத்தில் உள்ள உள்ளூர் மரம். அங்குள்ள வீடு அமைப்பு பெரும்பாலும் தேவதார் மர பலகையால் ஆனது. ஒவ்வொரு வீடும் நிறைய ஜன்னல்கள் கொண்டிருந்தது அது ஏன் என்று கேட்டபோது பனி காலத்தில் சூரிய ஒளி உள்ளே வருவதற்கு என்று ஆஷிஷ் கூறினார். அங்குள்ள ஆப்பிள் மரமும் மலை உயரத்திற்கு ஏற்றவாறு அதன் சுவையும் அளவு மாறுமாம்.
இருந்து வந்த கல்லூரி மாணவர்கள் அவர்களே எங்களிடம் வந்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் ராம் சார் தளங்கள் பற்றி எங்களிடம் உரையாடினார்கள்; ஒரு நல்ல அறிமுகமாக இருந்தது. அடுத்த நாள் நாங்கள் குழுவாக நான்கு அரசு பள்ளிகளை சென்று பார்த்தோம் , Dhamandri, Cheog மற்றும் Sarog. மிகவும் இயற்கை எழிலுடன் இருந்தது . எல்லா பள்ளிகளிலும் பெரும்பாலும் நாங்கள் பார்த்த வசதி ஈகோ கிளப் மற்றும் குப்பை மேலாண்மை. மாணவர்களின் சீருடைகள் கூட ஒரு தனியார் பள்ளியை போல இருந்தது. மொழி புரியவில்லை என்றாலும் தலைமை ஆசிரியர் /ஆசிரியை எங்களை நன்றாக வரவேற்றனர். பேச தொடங்கிய போது அவர்களுக்கு, நாங்கள் தொடங்க போகும் வேலையில் மிகவும் ஆர்வம் இருந்ததை புரிந்து கொண்டோம். கடைசி நாள் எங்களுக்கு சிம்லாவில் சுற்றி பார்க்க சிறிது நேரம் கிடைத்தது. ஸ்ரீ அந்த ஊரில் வசிப்பவர் அவர் எங்களுக்கு சிம்லாவில் உள்ள மால் ஸ்ட்ரீட் சுற்றி காட்டினார். அருங்காட்சியகம் ஒன்றை பார்க்க சென்றோம் அங்கு பிரிட்டிஷ் காலத்தில் இருந்த பழைய திரையரங்கை நாங்கள் பார்த்தோம், அங்கு ஒரு நாடகம்
முன்னோட்டமும் நடந்து கொண்டிருந்தது. நிறைய வண்ண ஓவியங்களும் புத்தகங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிம்லாவின் பாரம்பரிய புகைப்படங்களும் அங்கு காட்சிப்படுத்தினார்கள். அங்கு பல உணவுகளை ருசி பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் நாங்கள் ருசி பார்த்த சில உணவுகள் பானி பூரி, சோலே பட்டோரி, மோமோஸ் மற்றும் Siddu. சிம்லாவில் ஆப்பிள் தான் ஃபேமஸ் அதையும் நாங்கள் ருசி பார்த்தோம். ஹபிலும் எங்களுக்கு பலவகை உணவுகளை பரிமாறினார்கள், அங்கு தமிழ்நாட்டில் உள்ளது போல காரசாரமாக இல்லாவிட்டாலும்; நாங்கள் உண்ட உணவு வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. அங்கே நாங்கள் நிறைய பழ வகைகளையும் , காய்கறிகளையும் பார்த்தோம் நம் தமிழ்நாட்டில் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவே இருந்தது. நம் ஊரில் தான் அத்தனை சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று நினைத்தால் அங்கேயும் நாங்கள் நிறைய சுற்றுலா பயணிகளை பார்த்தோம் . இப்ப பயணத்தில் பல்வேறு விஷயங்களை எங்களால் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. ஹம்பும் எங்களுக்கு Keystone- இல் இருக்கும் ஒரு உணர்வை கொடுத்தது. நீலகிரியைத் தாண்டி இமயமலை வரை சென்று எங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு, மிகவும் அறிவுபூர்வமாக இருந்தது இப்பயணம்.
English Translation of Ponnamma and Manimegalai’s Experience
We are happy that our Climate Smart School work has gone beyond Tamil Nadu to India. Until we boarded the plane, we felt a nervousness mixed with joy knowing we were going to fly for the first time. We saw the airport for the first time; everything including boarding the plane was new! While we climbed up with fear in the plane, we descended happily. Our first experience was great.
We traveled by taxi from Chandigarh to Deoghu and all the scenery we saw on the way was very beautiful. We thought that the mountains in the Nilgiris were the most beautiful, but there (Himachal) the mountains are more beautiful than the Nilgiris. The houses and rocks there were different. In the evening, the sunset was a sight to behold and we reached Theog while enjoying it.
The next morning, we took an electric bus to the hub there. We had a hard time walking from the high mountain through a narrow path without any barrier, but the mountains, forests, roads and the apple orchard were very pleasant to see. We started our discussion with the team at the hub. Ashish and Sri are the climate educators there. We shared how we started climate change education, how we learned from our two-year experience, how we used activities, and used local examples to make students understand. Ashish told us many interesting things about the place: we thought the tree there was pine but it was cedar, the local tree of the place. The house structure there is mostly made of cedar planks. When asked why each house had lots of windows, Ashish said it was to let the sunlight in during the winter. The apple tree there also changes its taste and size according to the altitude of the mountain.
We were very happy that the college students themselves came and spoke to us. They talked to us about Ramsar sites in Tamil Nadu; it was a good introduction. The next day we visited four government schools as a group, Dhamandri, Theog and Sarog. It was very natural looking. Most of the facilities we saw in all schools were Eco Club and Garbage Management. Even the uniforms of the students looked like they were from a private school. Although we did not understand the language, the headmaster/teacher welcomed us very well. When we started talking, we realized that they were very interested in the work we were about to start. On the last day, we had some time for sightseeing in Shimla. Sri is a resident of that town and he showed us around Mall Street in Shimla. We went to visit a museum where we saw an old theater from the British era and watched a play there. A lot of colorful paintings and books were displayed there. Traditional photographs of Shimla were also exhibited there.
We got a chance to taste many dishes there. Some of the dishes we tasted were pani puri, chole pattori, momos and siddu. Apple is famous in Shimla, which we tasted too. At the hub, they also served us a variety of food, although not as spicy as in Tamil Nadu; the food we had was different and good. There, we saw a lot of fruits and vegetables which were a bit different from our Tamil Nadu. If you think that all the tourists come to our town, we saw a lot of tourists there too. On this trip we were able to compare various things. The hub also gave us a feeling of being in Keystone. The trip was very informative and an opportunity to share our experience beyond the Nilgiris to the Himalayas.
Vidya S., Climate Educator, Technical Coordinator, Climate Change:
We are happy to initiate the Climate Smart School project in Himachal Pradesh partnering with Royal Enfield. On 7th Oct 2024 me, my project coordinator Bhavya, along with our climate educators Ponnamma and Manimegalai started our travel to Theog, Himachal Pradesh. We met with the new team and introduced the Climate Smart School project; our educators shared their experience on how they conduct sessions and use activities to connect the lessons with local examples. Bhavya and the Royal Enfield team met with Mr. Rakesh (Secretary of Education in Himachal Pradesh) for official permissions. With the positive note form him we visited four government schools at Dhamandri, Cheog and Sarog. The schools were very interested with the project, we are looking forward to starting with our climate smart classes in this new mountain ecosystem.